பசியோடு சான்ட்விச் தேடிய பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார் மேற்கிந்தியத் தீவகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில்  உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.

இதன் போது மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக அவுஸ்திரேலியப் பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று  மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் அந்தப் பெண்மணி, பசிக்கொடுமையால் சான்ட்விச் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். 

நாள் முழுவதும் சாப்பிடாமல் பணியில் கவனம் செலுத்தியதால் பசியோடு சென்ற பெண்மணி குறித்த அறையில் சான்ட்விச் தேடியுள்ளார்.

அப்போது அங்கு நின்ற கிறிஸ் கெய்ல் இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிய நிலையில் அங்கு நின்றுள்ளார். 

பசியோடு சான்ட்விச் தேடிய அந்தப் பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி, தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் அணி முகாமையாளர் ரிச்சே ரிச்சட்சனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,  அனைத்து மேற்கிந்தியத்தீவுகள்  அணி வீரர்களும் பெண் ஊழியர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்ளுமாறு அணி முகாமையாளர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.