கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப பின்வழியால் தப்பிச் சென்ற நபர் : மூவர் கைது

Published By: Digital Desk 3

21 Dec, 2023 | 11:34 AM
image

பண மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கொழும்பு கறுவாத்தோட்டம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஞாயிறு  பத்திரிகை ஒன்றில்   விளம்பரம் வெளியிடப்பட்டே இவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர்கள் இதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட  அறையொன்றை பெற்றிருந்தனர் எனவும்   பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விளம்பரத்தின்படி நேற்று புதன்கிழமை (20) குறித்த இடத்துக்கு இரண்டு கொள்வனவாளர்கள் கார் மற்றும் ஜீப் ஒன்றை கொள்வனவு செய்ய வந்துள்ளனர்.

இதன்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பதற்குத்  தேவையான ஆவணங்களைத் தயாரிக்க  முற்பணம் தருமாறு குறித்த அலுவலகத்திலிருந்த  முகாமையாளரும்  மற்றொருவரும்   கொள்வனவாளர்கள் இருவரிடமும்  கேட்டுக்கொண்டனர்.

இதன்படி, ஒரு கொள்வனவாளரிடமிருந்து ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் மற்றைய நபரிடமிருந்து மூன்று கோடியே முப்பது இலட்சம் ரூபாவும் பெறப்பட்டுள்ளது.

பின்னர் பணத்தை பெற்ற அவர்களில் ஒருவர் குறித்த நிறுவனத்தின்   அறைக்கு சென்று, வாகன திறப்பு மற்றும் ஆவணங்களுடன் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றார்.

இதனையடுத்து இரு கொள்வனவாளர்களும்  செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணை நடத்திய பொலிஸார்  இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 41, 43 மற்றும் 65 வயதுடைய பன்னிபிட்டிய, மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05