இலங்கை போக்குவரத்து சபையின் இங்கிரிய - பாணதுறை - கொழும்பு பஸ் நடத்துனரிக் தகாத வார்த்தை பிரயோகத்தினால் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இங்கிரியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணியை இன துவேச வார்த்தை பிரயோகம் செய்துள்ளதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நடத்துனரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பயணிகள் செய்வதறியாது அதிர்ச்சிக்குள்ளாகி பல அசௌவுகரியங்களுக்கு முகம்கொடுத்த சம்பவம் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

காலை 5 : 50 க்கு இங்கிரியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரத்மலானை சாலையின் பேருந்தாகும். 

மேலும், மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்தி அலுவலகத்துக்கு செல்லும் பயணிகள் உட்பட பாடசாலை மாணவர்கள் குறித்த நடத்துனரினால் பல அசௌவுகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் சகோதர மொழி பத்திரிக்கையிலும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வாறான இ.போ.ச நடத்துனரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒவ்வோருநாளும் நடைபெற்று வருவதாக பயணிகளில் பலர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை  தொடர்பாக இ.போ.ச வின் மேல் மாகாண முகாமையாளர் மற்றும் இரத்மலானை சாலையின் முகாமையாளர் நடவடிக்கை எடுக்காததின் நோக்கம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஆகவே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடக்கும் நடத்துணர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறான பிரச்சிணைகளுக்கு நட வடிக்கை எடுக்க இலங்கை போக்குவரத்து சபையின் மேல் மாகாண முகாமையாளர் (அத்தியகட்சகர்) மற்றும் இரத்தமலானை இ.போ.ச முகாமையாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

மக்களுக்கு சேவை செய்வதற்காக சேவை வழங்கும் இவ்வாறான நடத்துனர்களுக்கு என்ன தீர்வு என மக்கள் மேலும் கேள்வியெழுப்புகின்றனர்.