வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காத்மண்டு பயணம் ; இலங்கை - நேபாளத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும்

20 Dec, 2023 | 04:47 PM
image

(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று புதன்கிழமை (20) காத்மண்டு பயணமானார்.

இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவிருக்கும் உயர்மட்டக்குழுவுக்குத் தலைமைதாங்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெறியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத்தலைமை தாங்குவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்பன உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் இலங்கை - நேபாளம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை (22) வரை காத்மண்டுவில் தங்கியிருக்கும் அமைச்சர் அலி சப்ரி, கூட்டு ஆணைக்குழு அமர்வின் பக்க அம்சமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதுமாத்திரமன்றி அவர் நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேபாளத்திலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சங்கிரிலா...

2024-04-23 09:51:51
news-image

கலவானையில் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகள்...

2024-04-23 09:28:23
news-image

மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5...

2024-04-23 09:49:08