கல்கிசை நீதவான் நீதிமன்றத்துக்குள் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் நீதிமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பையிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் (ரிவால்வர், பிஸ்டல்) மற்றும் 10 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக எடுத்துவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.