நியூசிலாந்துக்கு எதிரான இருபது 20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி, அதன் அணித்தலைவர் உள்ளிட்ட 17 பேர் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் இருபது 20 போட்டி எதிர்வரும் 2024 ஜனவரி 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன.
தற்போது விளையாடி வரும் தொடர் முடிவடைந்ததும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட இருபது 20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இந்நிலையிலேயே நியூசிலாந்துக்கு எதிரான இருபது 20 தொடரின் தனது அணித் தலைவர் உள்ளிட்ட 17 பேரின் பெயர் விபரங்களை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
அதன்படி, சாஹின் அப்ரிடி பாகிஸ்தான் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிவிட்ட நிலையிலேயே சாஹின் அப்ரிடி புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஹசீபுல்லா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் இருபது 20 தொடருக்கு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இருபது 20 தொடரில் களமிறங்கவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:
சாஹின் ஷா அப்ரிடி (அணித் தலைவர்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM