கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் ப்ரமோ வீடியோ ஒன்றை தயாரிப்பு தரப்பு நேற்று வெளியிட்டிருக்கிறது. அதில், கதாநாயகியின் பெயர் கயல்விழி என்றும் நகைச்சுவைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்ட நிலையில், அதன் பின் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
நீண்ட நாட்களுக்குப் பின், தமிழ் திரையுலகில் கதாநாயகியை மையமாகக் கொண்ட நகைச்சுவைப் படம் - அதுவும், சிறந்த நடிப்பாற்றல் மிக்க கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருப்பதால், ரகு தாத்தாவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமிருக்கிறது.
சுமன் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஷேன் ரோல்டன். தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டு திகதி வெகுவிரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்புத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM