இறுதி 3 பந்துகளில் 3 விக்கட்டுகள் : திரில் வெற்றியால் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி! (Highlights)

By Presath

01 Mar, 2017 | 01:45 PM
image

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் மற்றும் பேஸ்வர் சல்மி ஆகிய அணிகள் மோதின.

இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.

கிலாடியேட்டர்ஸ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் சேஷாட் 38 பந்துகளில் 71 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் 22 பந்துகளில் 40 ஓட்டங்ளை பெற்றுக்கொடுத்தார்.

பேஸ்வர் சல்மி அணி சார்பாக வஹாப் ரியாஷ் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 201 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இறுதிப் பந்து ஓவரில் 7 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்த பேஸ்வர் சல்மி அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.

பேஸ்வர் சல்மி அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 47 பந்துகளுக்கு 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மொஹமட் நவாஷ் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஹமட் சேஷாட் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15