பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை (18) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தை மீண்டும் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM