பண்டிகை காலத்தில் உங்களது குழந்தைகள் மீதான அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த சிறந்தவொரு வழி: அவர்களது எதிர்காலத்திற்கான பணத்தினை சேமிப்பதேயாகும்

Published By: Vishnu

20 Dec, 2023 | 03:20 PM
image

உங்களை மதிக்கும் SDB வங்கியானது, இந்தப் பண்டிகைக் காலத்தில் SDB 'லக்தறு' குழந்தைகள் சேமிப்பு கணக்கை  மேம்படுத்துவதற்காக இலக்கில் பிரசாரத்தை  மேற்கொண்டுள்ளது.

“எங்கே எனது நத்தார் தாத்தா” எனத்தலைப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சாரமானது, நீண்ட காலத்திற்கு நிலைத்துநிற்காத விளையாட்டுப் பொருட்களிலும் பரிசுப்பொருட்களிலும் செலவழிப்பதினை காட்டிலும் அவர்களது குழந்தைகளது எதிர்காலத்திற்காக பணத்தினை சேமிப்பதற்கு பெற்றோர்களை ஊக்குவிப்பதாக அமைகின்றது. 

கிறிஸ்துமஸ் என்பது மகிழ்விற்கும் கொண்டாட்டத்திற்குமான காலம் எனினும் இதுவே செலவழிப்பதற்கும் விரயமாக்குவதற்குமான காலமாகவும் காணப்படுகின்றது.

பல பெற்றோர்கள் நீடித்த பாவனையற்றதும் எந்தவொரு கல்விப் பெறுதியுமற்றதுமான விளையாட்டுப் பொருட்களையும் பரிசுப் பொருட்களையும் தங்களது பிள்ளைகளிற்கு வாங்கித்தரவே எண்ணுகிறார்கள்.

ஆகவே, இப்பண்டிகைக் காலத்தில் உங்களது குழந்தைகள் மீதான அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த சிறந்தவொரு வழி காணப்படுவதளை பெற்றோருக்கு நினைவுப்படுத்த இதுவொரு முக்கியமான காலமென SDB வங்கி அடையாளப்படுத்தியுள்ளது. 

SDB லக்தறு என்பது -உயர் வட்டி வீதம் மற்றும் அவர்களது கல்வி, சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சி என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் நன்மைகளது தொடராகவுமான- சிறந்த இரு உலகங்களை உங்களது பிள்ளைகளிற்கு வழங்குமொரு சிறுவர் சேமிப்பு கணக்காகும். ளுனுடீ லக்தறுவுடன், சிறு வயதிலிருந்தே சேமிப்பு பழக்கத்தினையும் நிதியியல் திறன்களையும் உங்களது பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள உதவ உங்களால் முடியுமென்பதுடன் அதேசமயத்தில் பரிசுகள், வவுச்சர்கள், காப்புறுதி, மற்றும் புலமைப்பரிசில்கள் போன்ற கவர்ச்சிகரமான வெகுமதிகளையும் அனுபவித்திடுங்கள்.

SDB லக்தறுவானது சிறுவர் சேமிப்புக் கணக்குகளிற்கு சந்தையில் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குவதுடன் உங்களது பிள்ளையின் எதிர்காலத்திற்கான திறன்மிக்க தேர்வாகவும் இதனை உருவாக்கியுள்ளது. உங்களது பிள்ளைகளும் கூட அவர்களை அதிகமாக சேமிக்க ஊக்குவிக்கவும் அவர்களது சாதனைகளை கொண்டாடவுமாக அவர்களது சேமிப்பு நிலுவையின் அடிப்படையில்  பரிசில்களையும் வவுச்சர்களையும் பெறுவார்கள்.

SDB லக்தறுவானது கணக்கு நிலுவையின் அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு வைத்தியசாலை காப்புறுதியினை வழங்கி, ஏதேனும் மருத்துவ அவசரகாலப் பகுதியில் தங்களிற்கு மனநிம்மதியினையும் நிதிப் பாதுகாப்பினையும் வழங்குகின்றது. அத்துடன் உங்களது பிள்ளை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையின் அதி சிறந்த பெறுபேற்றுக்காரரெனில், அவர்களது கணக்கு நிலுவையின் பிரகாரம் அதிக நன்மைகளை வழங்கும் கவர்ச்சிகரமான வெகுமதி திட்டங்களிற்கு தகுதியுடையவர்களாவார்கள். SDB லக்தறுவானது ஒரு சாதாரண சேமிப்பு கணக்கல்ல; இது உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்குமான பங்குதாரர் ஆகும். 

SDB வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர், ஹசித சமரசிங்க அவர்கள் இப்பிரச்சாரமானது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை பாரியளவில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். “சிறுவர்களுக்கென SDB லக்தறு சேமிப்பு கணக்கினை ஆரம்பிப்பதன் மூலமாக அவர்களது குழந்தைகளது எதிர்காலத்தில் முதலிடுவதற்கு பெற்றோர்களை ஆகர்சிக்க நாம் விரும்புகின்றோம். இவ்வழியில், அவர்களது பிள்ளைகளிற்கான பாதுகாப்பானதும் பிரகாசமானதுமானவொரு எதிர்காலம் அவர்கள் முன் காணப்படுகின்றது என்பதனை அவர்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அவர்களது பிள்ளைகளது வாழ்விற்கு எவ்வித பெறுமதியும் சேர்க்காத அனாவசிய செலவுகளை தவிர்க்கவேண்டிய செய்தியையும பகிர்ந்துக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். எமது பிரச்சாரமானது எமது இலக்கு வாடிக்கையாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் செயலில் இறங்க அவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் நாம் நம்புகின்றோம்.” என்றார்.

எண்ணியப் பிரச்சாரமானது யூ டியுப், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட எண்ணிய சமூக அலைவரிசைகளில் டிசெம்பர் மாத இறுதிவரையில் இடம்பெறும். வங்கியானது அதனது வாடிக்கையாளர்களுடனும் சாத்தியமான வாடிக்கையாளர்களுடனும் பங்குகொள்வதற்காகவும் SDB லக்தறு சிறுவர் சேமிப்பு கணக்கின் எதிர்காலத்திலான நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இடைவினை செயற்பாடுகள் மற்றும் போட்டிகளையும் நடாத்தவுள்ளது. 

26 வருடங்களிற்கும் மேலாக இலங்கை மக்களிற்காக சேவையாற்றும் ளுனுடீ வங்கியானது, அதனது வாடிக்கையாளர்களிற்கும் பொது மக்களிற்கும் சேமிப்பின் அவசியத்தை நினைவுறுத்துவதுதற்கு, விசேடமாக நாடு அனுபவித்துக்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்கள் நிறைந்த இந்நிலையானது,  முக்கியமான தருணமென்பதை நம்புகின்றது. வங்கியானது, நிலைபேண் நிதியியல் மற்றும் சமூக பொறுப்புணர்வு, அதேப்போல் தனியார் மற்றும் வர்த்தகம் என இரு தரப்பினருக்கும் வசதியளிக்கும் நவீனமானதும் பொருத்தமானதுமான வகைப்பட்ட தயாரிப்பு மற்றும் சேவைகளிலுமாக அதனது அரப்பணிப்புக்களையும் முன்னிறுத்தி காட்டவும் விளைவின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40
news-image

இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்தல் : சிறு...

2024-08-13 21:09:24
news-image

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன்...

2024-08-09 16:42:11