மன்னாரில் 525 ஜெலட்னைட் குச்சிகள் மற்றும் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது

Published By: Vishnu

20 Dec, 2023 | 07:29 AM
image

மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை (19) காலை நபர் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் 354 டெட்டனேட்டர்  குச்சிகள் உட்பட  இணைப்பு நூல் 10 றோலும் மீட்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பால வின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேரத்தின் ஆலோசனையின் கீழ் ரத்ணமணல தலை மையினரான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குருநாகல் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஜெலட்னைட் (டைனமைட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன். விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெலட்னைட் (டைனமைட்)மற்றும் டெட்டனேட்டர் குச்சிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கு எதிரான பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-05-21 16:28:15
news-image

'நிதியியல் அறிவு வழிகாட்டி' வெளியீடு -...

2024-05-21 15:34:05
news-image

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை...

2024-05-21 19:54:33
news-image

காலி மாவட்டத்தின் கருத்துக்களைப் பெற 3...

2024-05-21 17:44:35
news-image

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள...

2024-05-21 19:12:25
news-image

ஜனாதிபதி ரணில் அடுத்த மாதம் முக்கிய...

2024-05-21 15:32:47
news-image

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய தாய்லாந்து...

2024-05-21 17:43:14
news-image

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில்...

2024-05-21 18:25:12
news-image

இந்தியாவில் எந்த அரசாங்கம் வரினும் இணைந்து...

2024-05-21 18:20:09
news-image

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த...

2024-05-21 17:16:31
news-image

ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான சுகாதார வசதிகள்...

2024-05-21 15:34:58
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் நிறைவு...

2024-05-21 17:46:06