புலம்பெயர்ந்தவர்களை மீள நாட்டுக்கு வரவழைக்க சூழலை உருவாக்க வேண்டும் - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

19 Dec, 2023 | 05:57 PM
image

''அபிவிருத்திக்கான பயணத்திற்கு புலம்பெயர்ந்தவர்களுடன் வினைத்திறனாக செயற்பட வேண்டியது அவசியம். புலம்பெயர்ந்தவர்களை மீள நாட்டுக்கு வரவழைப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அவர்களுக்கான கௌரவம், உரிமைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான சிறந்த முயற்சிகளாக நட்டஈடு வழங்குதல், காணாமல் போனோரை தேடுதல் மற்றும் வழக்கு தொடுத்தல் போன்ற இயலுமைகளுடன் கூடிய குறிப்பிடத்தக்க அளவு அதிகாரம் கொண்ட உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்டமூலமொன்றை கொண்டுவரப்படவுள்ளது.'' என்று அமைச்சர் தெரிவித்தார்.  

ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற தேசிய குடிபெயர்ந்தோர் தின நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்திருப்போர் தொடர்பான அலுவலகத்தின் https://oosla.lk/ உத்தியோகபூர்வ இணையத்தளமும் சாகல ரத்நாயக்கவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் பேராசிரியர் லக்ஸ்மன் சமரநாயக்க சிறப்புரை ஆற்றியதோடு, அவர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகத்துடன் இணைந்து ஆற்றும் பணிகளைப் பாராட்டும் வகையில், சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

குடிபெயர்ந்த இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ.கிருஷ்ணமூர்த்தி  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அலுவலகத்தின் பணிகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் டிசம்பர் 18 ஆம் திகதி அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு உகந்த தினமாக அமையும் எனவும் தெரிவித்தார். 

பல்வேறு காரணங்களுக்காக 03 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிவித்த அவர், இந்நாட்டு பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை கடந்த காலங்களில் உணர்ந்துகொள்ள முடிந்தது எனவும் தெரிவித்தார்.  

வெளிநாடுகளுக்கான தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் பங்குபற்றிய இந்நிகழ்வில் குடிபெயர்ந்த இலங்கையர்கள் பலரும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இணைந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58