ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒழிக்க ’எலி ராணுவத்ததை’ உருவாக்கும் ரஷ்யாவின் புதுமை திட்டம்  

Published By: MD.Lucias

06 Jan, 2016 | 01:28 PM
image

எலிகள் உலகத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் எலிகளை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா முயற்சி எடுத்துள்ளது. இதற்காக ரஷ்யாவில்  3 விஞ்ஞானிகள் குழுக்கள் செயல்பட்டு வருகிறன.

ஆப்பிரிக்காவின் வெள்ளெலிகள் நில கண்ணி வெடிகளை கண்டறிய அங்கோலா, தான்சானியா, மொசாம்பிக், கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறன.

கொலம்பியா இதே நோக்கத்திற்காக ஆய்வக எலிகளை பயன்படுத்துகிறது. இஸ்ரேல் விமான நிலையங்களில் பயண பெட்டிகளை சோதனைச் செய்ய இத்தகைய எலிகளை பயன்படுத்துகின்றனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஓழிப்பதில் ரஷ்யா தீவிரமாக உள்ளது. தற்போது இதற்கு எலிகளை பயன்படுத்தும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. 

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ’எலி இராணுவம்’   தயார் செய்து வருகிறது. 

எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதி களுக்கு எதிராக இராணுவத்தில் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.

எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றை அறுவை சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். 

இதன் மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது. தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்களை அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும்.

மோப்ப நாய்களை விட எலிகள் அளவில் சிறியதாக இருப்பதால் அவை எதிரி களின் எல்லைகளுக்குள் எளிதாக நுழைந்து விட முடியும். 

இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணி வெடிகள், ஆயுதங்கள் இருந்தால் தங்களுடைய நுகர்வு சக்தி மூலம் ராணுவ வீரர்களுக்கு எலிகள் தெரிவித்து எச்சரிக்கை செய்யும்.

இது போன்று ஒரு மாபெரும் ’எலி ராணுவத்தை உருவாக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்ட மிட்டுள்ளனர்.

இருந்தாலும் இதில் ஒரு பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம் என்பதால் அதற்கு குறைந்தது 3 மாதங்களில் ராணுவ பயிற்சி அளித்து தயார் படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இளமையான மற்றும் வயது முதிர்ந்த எலிகளையும் இந்த சோதனையில் ஈடு படுத்த முடியாது. ரஷ்யாவின் ரோஸ்டவ் - ஆன் - டன் நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இத்தகைய பயிற்சியளிக்கப்படும் எலிகளை எதிரிகளை வீழ்த்த மாத்திரமின்றி மக்களை காப்பாற்ற முடியும். 

உதாரணமாக, பூமியதிர்ச்சி ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்களை சிதறி கிடக்கும் கற்களுக்கு இடையே புகுந்து சென்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என எலிகளின் நுகர்வு சக்தி மூலம் மீட்பு குழுவினர் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10