டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த Youth Tech Skills நிகழ்வுக்கு வலுவூட்டும் மக்கள் வங்கி

19 Dec, 2023 | 05:16 PM
image

இலங்கையிலுள்ள மிகவும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட வங்கிகளுள் ஒன்றாகவும், டிஜிட்டல் நிதி முறைமையில் அனைவரையும் அரவணைப்பதில் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கி, டிஜிட்டல் பொருளாதாரம் என்ற கோணத்தில் இலங்கையை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை இளைஞர், யுவதிகள் மத்தியில் வளர்த்து, அவர்களுக்கு வலுவூட்டுவதில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ளது.

வங்கித் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் முன்னோடி என்ற வகையில், தனது வர்த்தக சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையில் மூலோபாயம்மிக்க மாற்றமொன்றை மேற்கொண்டு,Sarvodaya Fusion  உடன் இணைந்து ‘Empowering Tomorrow's Innovators: Youth Tech Skill Development Project’ என்ற நிகழ்விற்கு வலுவூட்ட மக்கள் வங்கி பெருமையுடன் முன்வந்துள்ளது. கொழும்பு 05 இலுள்ள மக்கள் வங்கி பணியாளர் பயிற்சிக் கல்லூரியில் இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றதுடன், மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான திரு. கிளைவ் பொன்சேகா மற்றும் Lanka Jathika Sarvodaya Shramadana Sangayama  (சர்வோதய இயக்கம்) இன் தலைவரான கலாநிதி வின்ய ஆரியரத்ன ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர்.     

இச்செயற்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலமாக, வங்கியானது சமுதாய அபிவிருத்திக்கு பங்களிப்பது மட்டுமல்லாது, இலங்கையில் நேர்மறையான மாற்றம் மற்றும் புத்தாக்கத்திற்கான வழிகாட்டி என்ற தனது ஸ்தானத்தையும் அது நிலைநிறுத்தியுள்ளது. கணினி விஞ்ஞான கற்கை நிகழ்ச்சித்திட்டத்திற்காக (Diploma in Computer Science -DICS) திறமைசாலி இளைஞர்,யுவதிகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி, அவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வளித்து, திறன்கள் தொடர்பான இடைவெளியை குறைத்து, புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை வளர்ப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். 

முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டாண்மை தொடர்பில் மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஏற்றுமதி சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாடு மகத்தான வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதை எம்மால் காண முடிகின்றது. இந்த கனவை நனவாக்குவதற்கு, நிதியியல் பின்புலத்தின் பாகுபாடின்றி ஒவ்வொரு இளைஞருக்கும், யுவதிக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வி கிடைக்கப்பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதனாலேயே ‘‘Empowering Tomorrow's Innovators: Youth Tech Skill Development Project’  என்ற செயற்திட்டத்தை வழிநடத்த மக்கள் வங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளதுடன், தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், இலங்கையிலுள்ள இளைஞர்,யுவதிகளின் எதிர்காலத்திற்கான ஒரு தைரியமான இலக்கினை இது பிரதிநிதித்துவம் செய்கின்றது.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்ஃபொது முகாமையாளருமான திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் இதுதொடர்பில் மேலும் விளக்குகையில், “இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் முன்னோடி என்ற வகையில், தற்போதைய பணி உலகில் இன்றியமையாததாக காணப்படுகின்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கற்பதற்காக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி, உள்நாட்டில் திறமைசாலிகளை வளர்க்கின்ற மிகுந்த நற்பயனை ஏற்படுத்தும் இச்செயற்திட்டத்திற்கு ஆதரவளிக்க மக்கள் வங்கி பெருமையுடன் முன்வந்துள்ளது.

அறிவுப் பொருளாதாரத்தின் மீது முதலீடு செய்வதால் எமது நாட்டிற்கு காலப்போக்கில் மகத்தான பலன்களை அறுவடை செய்ய உதவும் என நாம் திடமாக நம்புகின்றோம். சமூக அபிவிருத்தி மற்றும் இளைஞர்,யுவதிகளுக்கு வலுவூட்டுவதில் மக்கள் வங்கி நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய செயற்திட்டத்தினூடாக, டிஜிட்டல் அறிவை மேம்படுத்தி, வேலைவாய்ப்பைத் தோற்றுவிக்க மக்கள் வங்கியால் முடியும் என்பதுடன், பல்வேறு மாகாணங்களிலிருந்தும் இளைஞர்,யுவதிகளை தெரிவு செய்து பிராந்தியரீதியாக அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கப்படுவதை உறுதி செய்து, இளைஞர்,யுவதிகள் மத்தியில் சர்வதேச மட்டத்திற்கு செல்வதற்குத் தேவையான போட்டித்தன்மையை உருவாக்குகின்றது,” என்று குறிப்பிட்டார்.

Lanka Jathika Sarvodaya Shramadana Sangayama (சர்வோதய இயக்கம்) இன் தலைவரான கலாநிதி வின்ய ஆரியரட்ண அவர்கள் இது தொடர்பில் கூறுகையில், “எமது இளைஞர்,யுவதிகளின் தொழில்நுட்பவியல் கல்வி மீது மேற்கொள்ளும் முதலீடு, எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும். இந்த முயற்சியில் அங்கம் வகிப்பதை Sarvodaya Fusion மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதுடன், நாளைய புத்தாக்குனர்களை புடம் போடுவதில் மக்கள் வங்கியின் முயற்சிகளை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்,” என்று குறிப்பிட்டார். 

‘Empowering Tomorrow's Innovators: Youth Tech Skill Development Project’ என்ற செயற்திட்டமானது, கணினி விஞ்ஞான கற்கை நிகழ்ச்சித்திட்டத்திற்காக (Diploma in Computer Science -DICS) 15-19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 100 புலமைப்பரிசில்களை வழங்கும் என்பதுடன், programming, web development, networking, graphics மற்றும் computer mathematics  அடங்கலாக பல்வேறு அம்சங்களை இக்கற்கைநெறி கொண்டிருக்கும். இது ஒன்பது மாத காலம் கொண்டதாக உள்ளதுடன், தேசிய தொழிற்தகமை தரம் 4 க்கு ((NVQ level 4) ஒப்பானதாக உள்ளது. இது கணினி விஞ்ஞானத்தில் வலுவான அத்திவாரத்தை வழங்குகின்றது. இந்த டிப்ளோமா தகமையைக் கொண்டிருப்பவர்,  NIBM  மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான தகைமையைக் கொண்டிருப்பவராக கருதப்படுவார்.

இவை அனைத்திற்கும் மேலாக, இச்செயற்திட்டத்தின் 1 வது ஆண்டில் கற்கைநெறியின் ஆரம்பம் மற்றும் மக்கள் வங்கிக் கிளைகளின் ஊடாக பயனாளிகளின் தெரிவு மற்றும் DICS கற்கைநெறியின் ஆரம்பம் ஆகியன அடங்கியிருக்கும். இந்த ஆண்டு Hackathon மற்றும் பட்டமளிப்பு வைபவத்துடன் நிறைவுறும். 2 வது ஆண்டில் இச்செயற்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, Hackathon இல் சிறந்த பெறுபேறுகளை ஈட்டும் முதல் 10 பேருக்கு உயர் கல்விக்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.  இச்செயற்திட்டத்திற்கு முதலீடு செய்வதன் மூலமாக, தேசம் மற்றும் அதன் இளைஞர்,யுவதிகளுக்கு பயனளிக்கும் நீண்டகால விளைவைக் கொண்ட நிலைபேண்தகு பெறுமதி சேர் வேலைத்திட்டமொன்றைத் தோற்றுவிக்கும் மக்கள் வங்கியின் இலக்குடன் இதனை ஒத்திசையச் செய்துள்ளது. 

மக்கள் வங்கி தொடர்பான விபரங்கள் 

1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கிச் சட்டமூல இலக்கம் 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி, ரூபா 3.0 டிரில்லியனுக்கும் மேற்பட்ட திரட்டிய சொத்துக்களுடன் நாட்டில் இரண்டாவது பாரிய நிதியியல் சேவைகள் வழங்குநராகத் திகழ்ந்து வருகின்றது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்ற தொழில்நுட்பவியல் மேம்பாடுகளுக்கு அமைவாக, மக்களின் டிஜிட்டல்மயமாக்கல் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணிப் பங்கு வகிப்பதையிட்டு மக்கள் வங்கி பெருமையடைகின்றது. வங்கியின் இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை தீர்வகள் தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. சமுதாயத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் தொடர்பில் மக்கள் வங்கி மிகநீண்ட கால அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. தேவைப்படுகின்ற பாடசாலைகளுக்கு சூரிய மின்னுற்பத்தி ஏற்பாடுகளை வழங்கியதைப் போன்ற முன்னைய வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் நலிவுற்றவர்களின் வாழ்வுகளை மேம்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றன. 

Sarvodaya Fusion  தொடர்பான விபரங்கள்

இலங்கை சர்வோதய இயக்கத்தின் (Sarvodaya Shramadana Movement) அபிவிருத்தி மற்றும் வலுவூட்டலுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அங்கமே Sarvodaya Fusion.  சமூகங்களை இலத்திரனியல் தளத்தில் வலுவூட்டுகின்ற நோக்குடன், டிஜிட்டல் இடைவெளியை நிரப்பி, சமூக-பொருளாதார அபிவிருத்தியை வளர்ப்பதில் Sarvodaya Fusion  ஒரு மூலகர்த்தாவாகச் செயற்பட்டு வருகின்றது. திறமைசாலிகளை வளர்த்து, அதிநவீன திறன்களை இளைஞர்,யுவதிகளுக்கு வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடன் உள்ள இந்த வலுவான ஸ்தாபனம், பிரகாசமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்கின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியின் மூலமாக நபர்களை வலுவூட்டுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.   தொழில்நுட்பக் கல்வியின் முன்னோடி என்ற வகையில், டிஜிட்டல் யுகத்தில் செழிப்பதற்குத் தேவையான கருவிகளை வழங்கி, தேசத்தின் அபிவிருத்தியில் பங்களிப்பதற்காக எண்ணுக்கணக்கற்ற வாழ்வுகளை Sarvodaya Fusion தொடர்ந்து வளப்படுத்தி வருகின்றது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11