இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி சீக்குகே பிரசன்னவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I , அசேல குணவர்தனவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II , ஆகிய பதவி உயர்வுகள் இராணுவத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.