(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை உறுதிப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் விதந்துரை செய்யப்பட்ட பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை உறுதிப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சமகாலத்தில் வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், 2023.12.31 திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் திறந்த சந்தையில் முட்டையின் சில்லறை விலை அதிகரிக்கும் போக்கு நிலவுகிறமையால், உள்ளுர் திறந்த சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கத்தினால் ஏற்கனவே விதந்துரை செய்யப்பட்ட இந்திய பண்ணைகளிலிருந்து தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM