நாம் உட்கொள்ளும் உணவு நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் உடலை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கம் செலுத்துகிறது. ஆரோக்கியமான உணவு நாள் முழுவதும் நம் ஆற்றல் அளவை தீர்மானிக்கிறது. எனவே சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில், அன்றாடம் புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து நிறைந்த எளிதில் ஜீரணமாகும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நன்கு சமநிலையான, சத்தான உணவு, மேம்பட்ட ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பங்களிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஆரோக்கியமான உணவு என்பது நம்மை ஆற்றல் மிக்கவர்களாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாம் சோர்வாக மந்தமாக இருந்தாலும், வேலையின்போது தூக்கம் வருவதுபோல உணர்ந்தாலும், உடனடியாக காபி அல்லது டீ குடிக்கலாமா என தோன்றும். ஆனால், நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஆற்றலை அதிகரிக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழங்கள், ஓட்ஸ், குயினோவா, சியா விதைகள், பாதாம், கீரை, பீட்ரூட், ஆரஞ்சு, லீன் புரதங்கள், கிரீன் டீ
மேலே கூறப்பட்டுள்ள உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதோடு, வழக்கமான உடற்பயிற்சி, சரியான தூக்கம் என்பவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் நம் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு இது பொதுவான தகவல் மாத்திரமே. இவற்றை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM