வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
திறந்த சந்தையில் போதியளவு சோளம் இன்மையால், கோழி உணவு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகின்றது.
அதற்காக தற்காலிக நடவடிக்கையாக கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் 15,000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு உயர்ந்தபட்சம் 15.000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதிக்கான பெறுகையை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM