பிரதமர் தினேஷ் குணவர்தன- பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Published By: Digital Desk 3

19 Dec, 2023 | 08:47 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த யாத்ரீகர்களின் பாகிஸ்தானுக்கான விஜயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் விளக்கினார். இலங்கையர்களுக்கு பௌத்த யாத்திரை தலங்களை திறக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர்,கடந்த ஆண்டு பௌத்த பிக்குகள் ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாதுகாக்கப்பட்ட பௌத்த பாரம்பரியங்களை பார்வையிடுவதற்காக ஒரு சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு நன்றி தெரிவித்தார். அவ்வாறானதொரு சுற்றுலா அடுத்த ஆண்டு முன் அரைப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமை மற்றும் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாகிஸ்தான் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமைக்காக பாகிஸ்தான் தூதுவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பாகிஸ்தான் தொழில் முயற்சியாளர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதுடன் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு இதணை கொண்டு செல்வதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.மேலும் இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

 

.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42