இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்

Published By: Vishnu

18 Dec, 2023 | 08:22 PM
image

(நா.தனுஜா)

அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். 

கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கை விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது;

முதன்முறையாக கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ப்ரியன் மல்ரொனியினாலேயே 1980 ஆம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து வருகைதந்த பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் வரவேற்று, கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் பிரதமர் ஹார்பரின் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தடைகளை விதித்து, பகிரங்க கண்டனத்தையும் வெளியிட்டது. அதுமாத்திரமன்றி கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டையும் ஹார்பரின் அரசாங்கம் புறக்கணித்ததுடன், அது அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அவமானமாக அமைந்தது. 

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதே எனது திட்டமாக இருக்கின்றது. அதன்மூலம் அந்நபர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும்.

அதுமாத்திரமன்றி இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்களை அடையாளங்கண்டு, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எமது சட்டத்தரணிகள் ஊடாக முன்னெடுக்கப்படும்.

மேலும் தற்போதும் தமிழ்மக்களின் உரிமைகளை மீறும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நாம் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கண்டிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை மீது குவியும் கவனம்

2024-06-16 12:33:11
news-image

13 குறித்த வாக்குறுதிகளும் தடுமாற்றங்களும்

2024-06-16 12:34:49
news-image

மேற்குலகின் போர்ப்பணம் வெளிநாடுகளில் முதலீடு? :...

2024-06-16 10:23:25
news-image

கல்வி கற்கும் இளைஞர்களும் இணையவழி சிறுவர்...

2024-06-15 19:48:56
news-image

வெற்றி அடைந்தவர்களின் தோல்வியும் தோல்வி அடைந்தவர்களின்...

2024-06-15 19:04:27
news-image

தெற்காசியாவின் பார்வையில் மோடியின் மூன்றாவது பதவிக்காலம்

2024-06-15 18:02:34
news-image

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வரலாற்று முக்கியத்துவ...

2024-06-15 17:28:10
news-image

கதவை திறந்த ரணில்

2024-06-14 13:40:31
news-image

Factum விசேட கண்ணோட்டம்: தேர்தலுக்குச் செல்லும்...

2024-06-13 10:04:03
news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50