பிரான்ஸ், பாரீஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என பாரீஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பாரிஸில் 7 இடங்களில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 158க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.


இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது.  

 

 மேலும் அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் எவருக்கு அவசர உதவி தேவைப்படுமாயின் +33620505232,  +33677048117 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.