ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நூறு இலட்சம் வாக்குகளை பெறுவார் - ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை

Published By: Vishnu

18 Dec, 2023 | 09:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நூறு லட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆசனத்தில் அமருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை நகைச்சுவைக்கோ வேறுமனேயாே தெரிவிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல்வாதி என்பதற்கு அப்பால் அவர் ஒரு பொருளாதார நிபுணர். அதனால் எடுத்த வருடம் ஏப்ரல் மாதமாகும் போது பொருளாதார ரீதியில் நாட்டை எந்த இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற தெளிவான இலக்கை நோக்கியே தற்போது அவர் பயணிக்கிறார். அதனால் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

வங்குராேத்து நிலையில் இருந்த நாட்டை குறுகிய காலத்தில் அதில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதேபோன்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.

மக்கள் சுதந்திரமாக செயற்பட ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டமே காரணம். நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மீண்டாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீள வில்லை. படிப்படியாகவே அதனை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

அத்துடன் அடுத்த வருடம் நாட்டில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இ்டம்பெற இருக்கின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெற இடமிருக்கிறது.

அதனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி ரணில விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அவர், வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் பெற்றுக்கொள்ளாத வாக்குகளைவிட நூறு இலட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதி ஆசனத்தில் அமருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டை கட்டியெழுப்ப அவர் முன்னெடுக்கும் தெளிவான திட்டத்தை அடிப்படையாகக்கொண்டே இதனை தெரிவிக்கிறேன்.

அத்துடன் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சியும் எங்களுடையது. அதேநேரம் ஜனநாயக முறையில் செயற்படுவதற்கு மக்களால் தெரிவு செய்யப்படும் எதிர்க்கட்சியையு்ம் நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் என தற்போது பலரும் அறிவித்து வந்தாலும் இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு இடத்துக்கு வரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30