வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காத்மண்டு பயணம் - இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் பங்கேற்பார்

18 Dec, 2023 | 09:10 PM
image

(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி புதன்கிழமை (20) காத்மண்டு பயணமாகவுள்ளார்.

மேற்படி அமர்வில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவிருக்கும் உயர்மட்டக்குழுவுக்குத் தலைமைதாங்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெறியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத்தலைமை தாங்குவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்பன உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் இலங்கை - நேபாளம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) வரை காத்மண்டுவில் தங்கியிருக்கும் அமைச்சர் அலி சப்ரி, கூட்டு ஆணைக்குழு அமர்வின் பக்க அம்சமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதுமாத்திரமன்றி அவர் நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேபாளத்திலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58