(எம்.வை.எம்.சியாம்)
நமது நாடு முட்டையில் தன்னிறைவு அடையவில்லை என்றும் இதற்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனால் முட்டையைக் கூட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியைக் கூட இழக்க நேரிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர் சக்தியின் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நமது நாடு முட்டையில் தன்னிறைவு அடையவில்லை. இதற்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணம்.இதனால் முட்டையைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியைக் கூட இழக்க நேரிட்டுள்ளது.
நாட்டில் முறையான முட்டை உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டு முட்டைத் தொழிலுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் உள்நாட்டில் முட்டைகள் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யும் அதேவேளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
நாட்டில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் இல்லாததும் தேவையான வசதிகளுடன் தேசிய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படாமையே இதற்குக் காரணம். முட்டையில் தன்னிறைவு பெறுவது மட்டுமின்றி குடிசை தொழிலை சிறு தொழிலாக மாற்றி தொழில்முனைவோரை உருவாக்கி முட்டை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி அந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
இதேவேளை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரையிலான கடல் பரப்பு நாட்டுக்கு சொந்தமானது என கூறப்பட்டாலும் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. நாட்டில் நிதி இல்லையென்றால் கடல்சார் பொருளாதார முயற்சியாண்மைகளுக்கு கூட்டுத் திட்டங்கள் மூலம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எம்மால் அடையலாம் இவ்வாறான புதிய ஆக்கபூர்வமான தீர்வுகள் நாட்டுக்கு தேவை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM