கண்டி - குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த 3 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி வகுப்பு ஒன்றின் போது கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மேற்படி 2 மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களை  தெல்தெனிய நீதவான் முன் ஆஜர்செய்யவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைதானவர்கள் தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்புளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.