உதாகம்மானவில் 39815 வீடுகளின் பணிகளை நிறைவுசெய்ய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை

Published By: Vishnu

17 Dec, 2023 | 09:37 PM
image

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது கைவிடப்பட்ட 2,150 உதாகம்மானவில் பாதியாகக் கட்டப்பட்ட 39,815 வீடுகளின் பணிகளை விரைந்து முடிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள சோலார் பேனல் வீடமைப்புத் திட்டம் மற்றும் கிராம வேலைத்திட்டத்திற்கான மின் உற்பத்தி நிலையத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளரினால் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச அவர்கள்  வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 ஆகிய நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் 2158 உதாகம்மானவில் 42610 வீட்டுத் தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அதன் பணி ஓரளவு நிறைவு பெற்றது. பெரும்பாலான வீடுகள் வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளதாகவும், அதன் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும் கடந்த காலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு உதாகம்மானத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை பல உதாகம்மானவுக்கு பகுதிகளாக பகிர்ந்தளிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவர்களது காலத்தில் பல கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டன என்பதைக் காட்டும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சஜித் பிரேமதாசவின் காலத்தில் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட  8 உதாகம்மானவில்  2795 வீடுகளின் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அக்கிராமங்களில் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் கோவிட்-19 வைரஸின் பரவல் மற்றும் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, திட்டத்தை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு அந்த கிராமங்களில் பணிகள் முடியும் வரை புதிய கிராமங்களை அமைக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளை விரைவாக நிர்மாணிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கு 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதிகார சபை கூறுகிறது.

அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத் திட்டத்தை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், சஜித் பிரேமதாச வீடமைப்புக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த காலத்தில் தனது மனம் போன போக்கில் வீட்டு உதவி மற்றும் கடன்களை வழங்கியதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அதிகளவான வீடமைப்பு உதவிகள் மற்றும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த விசாரணைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தகுதியற்ற பயனாளிகளுக்கு எதிர்கால வீட்டுக் கடன்கள் மற்றும் உதவித் தவணைகளை வழங்காது என்றும், இதுவரை வழங்கப்பட்ட தவணைகளை வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13