புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்டமோல்ட்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மோல்ட்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கடற்படை கப்பல் தற்போது எம்.வி.ரூன் கப்பலை நேற்று காலை இடைமறித்தது. எம்.வி.ரூன் சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியை இந்திய கடற்படையினர் கூட்டணி நாடுகளின் கடற்படை உதவியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM