இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து, ஜப்பான் நாடுகளின் தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.
அதனை தொடர்ந்து, இக்குழுவினர்கள் நேற்று (16) காலை 10.00 மணிக்கு நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்தனர்.
சுவிற்ஸர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத் தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்தனர்.
இதன்போது வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமய ரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத் தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சினைகள், அதன் ஊடாக அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறக்கூடிய செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படைக்கு தேவையான விடயங்கள், கலாசார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM