பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமில் 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பை ரங்கன ஹேரத் ஏற்றுள்ளதுடன், முதன் முறையாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார அணிக்குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி காலியில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை குழாமின் முழு விபரம் இதோ...

 1. ரங்கன ஹேரத் (அணித் தலைவர்)
 2. திமுத் கருணாரத்ன
 3. நிரோஷன் டிக்வெல்ல
 4. உபுல் தரங்க
 5. தனஞ்சய டி சில்வா
 6. குசால் மெண்டிஸ்
 7. தினேஸ் சந்திமால்
 8. அசேல குணரத்ன
 9. சுராங்க லக்மால்
 10. நுவான் பிரதீப்
 11. லஹிரு குமார
 12. விகும் சஞ்சய பண்டார
 13. லக்ஷான் சந்தகன்
 14. டில்ருவான் பெரேரா
 15. மலிந்த புஷ்பகுமார