பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 45 நாட்கள் நீண்ட கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது.

கடந்த நான்கு வருடங்களின் பின் பங்களாதேஷ் அணி தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் மொரட்டுவையில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றிலும் பங்களாதேஷ் அணி கலந்துகொள்ளவுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு - 20 போட்டி ஆகின கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது.

இந்நிலையில் இம்முறை இலங்கை அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் 3 ஒருநாள் தொடரிலும் 2 இருபதுக்கு - 20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.