பொதுமக்கள் கருத்தைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Published By: Priyatharshan

28 Feb, 2017 | 03:49 PM
image

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரி, இலங்கை மின்சார சபையால் “குறைந்த செலவு – நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் (LCLTGEP) 2018-2037” ஆனது, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ’உள்ளீட்டு அளவுருக்கள் மற்றும் அனுமானங்கள் (input data parameters and assumptions)’ ஆனவை, இத்திட்டத்தின் தயாரிப்பின் அடிப்படையாக இருந்தமையுடன் அதி முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளன.

இந்த ’உள்ளீட்டு அளவுருக்கள் மற்றும் அனுமானங்கள்’ தொடர்பில் பொதுமக்கள் கருத்தையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தீர்மானித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தமித்த குமாரசிங்க இது பற்றிக் கூறுகையில்,

“நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டத்தின் உருவாக்கத்திற்குப் பயன்பட்ட உள்ளீட்டுத் தரவுகள் தொடர்பில் பொது மக்களின் கருத்தை அறிவதற்கான தளத்தை நாம் ஆக்கியிருப்பது இதுவே முதல் தடவை ஆகும். எரிபொருள் விலைகள், சமூகச்சேதச் செலவுகள், மாதிரி புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழினுட்பங்கள் மற்றும் பிற பாதுகாப்பான பிறப்பாக்க நிலையங்களின் செலவுகள் மற்றும் பயன்படத்தக்க அளவுருக்கள் போன்றவை மீதான கருத்துகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கும் செயன்முறையின் போது, மக்களின் கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும்.”

“ இந்த நடவடிக்கையின் மூலம், அனுமதியளிக்கும் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே நாம் விரும்புகின்றோம். இலங்கையின் அதி முக்கிய சக்திப்பிறப்பாக்கத் திட்டத்தின் முடிவெடுக்கும் செயன்முறையில், பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என நாம் நம்புகிறோம்.” என்று கூறினார்.

எதிர்வுகூறல் தரவுகளின் அடிப்படையில், 2585 MW எனும் உச்சபட்ச தேவைப்பாட்டின் மத்தியில், இலங்கையானது 2017ம் ஆண்டில் 15160 Gwh அளவு மின்சாரத்தினைப் பிறப்பிக்கவுள்ளது. 2042 ஆம் ஆண்டுக்கான மின்சாரப் பிறப்பாக்க எதிர்வு கூறலானது, 7784 MW உச்ச பட்ச தேவைப்பாட்டுடன், 49121 Gwh ஆகக் காணப்படுகிறது.

2018-2022 ஆண்டு காலப்பகுதியில், மின் பிறப்பாக்கத் தேவைப்பாடானது 5.9 வீத்த்தால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை உச்சபட்ச தேவைப்பாடானது 5.1 வீதத்தால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

அரசாங்கக் கொள்கை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்ட குறை செலவு மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டமிடற்கோவை ஆகியவற்றுக்கு அமைய, புதிய பிறப்பாக்கத் தொழினுட்பங்களின் மாதிரியாக்கம், குறை செலவு பிறப்பாக்க நிலையக் கலவையின் அடையாளம் காந்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படும், இந்த உள்ளீட்டுத்தரவுகளானவை தேவைப்பாட்டு எதிர்வுகூறல், நம்பகப் பிரமாணம், பொருளாதார அளவுருக்கள், எரிபொருள் விலைகள், செலவு மற்றும் பிற அளவுருக்களைக் குறித்துரைக்கின்றன.

திட்டமிடுபவரால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுள், ஒரு நீண்ட காலப் பகுதிக்கான சக்திப் பிறப்பாக்க முறைமைக்கான உகந்த விரிவாக்கத் திட்டத்தை பயனாளர் கண்டறிவதற்கு உதவுகின்ற, பிறப்பாக்கத் திட்டமிடல் மென்பொருளில் இந்த உள்ளீட்டுத்தரவுகள் பதியப்படும். சுமை நிகழ்தகவின் இழப்பு எனும் அளவுருவானது திட்டமிடற்காலத்தில் 1.5 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒதுக்கீட்டு விளிம்பு எனும் அளவுருவானது மிகைக் கொள்ளளவு தயார்நிலை மற்றும் தேவைப்பாட்டிற்கு இடையிலான விகிதத்தைக் காட்டுகின்றது. இது 2018-37 LCLTGEPக்கான காலப்பகுதியில் 20 வீத அதிகபட்ச நிலையிலும், 2.5 வீத குறைந்த பட்ச நிலையிலும் இருக்கும். சமூகச்சேதச் செலவு, சூழல் தாக்கம் மற்றும் மின் பிறப்பாக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை, அண்மைய ஆய்வுக் கற்கைகளுடன் ஒப்பிட்டுச் செய்யப்படும் பகுப்பாய்வினைப் பயன்படுத்தி கணிக்கப்படும்.

பொருளாதார அளவுருக்களின் கீழ், அனைத்துப் பகுப்பாய்வுகளுடனும் தொடர்புடைய, விலைக் கழிவு செய்யப்பட்ட காசுப்பாய்ச்சல் பகுப்பாய்விற்கு 10% ஒரு பொருளாதார கழிவு வீதமாக பயன்படுத்தப்படும். அத்துடன் அது, அனைத்து மாற்றுகளின் தற்போதைய நிகரப் பெறுமானங்களைக் கணக்கிடவும் உதவும். சேவையளிக்கப்படாத சக்தியின் பெறுமானம் ஆனது திட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதாரப் பகுப்பாய்வில் பரிசீலிக்கப்படும். அத்துடன், முதற் சமர்ப்பிப்பிற்கான (2011ல்) அப் பெறுமானம் .50 USD/kWh ஆகவும் தற்போது 0.663 USD/kWh ஆகவும் உள்ளது.

இலங்கையில், 1506.7 MW கொள்ளளவைக் கொண்டதான இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 8 அனல் மின் நிலையங்கள் ஓட்டோ டீசல், ரிசிடுவல் எண்ணெய், நப்தா மற்றும் நிலக்கரி ஆகியவற்றினால் இயக்கப்படுகின்றன. இயற்கை வாயு, உலை எண்ணெய் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றால் இயக்கப்படும் 505 MW கொள்ளளவுடைய 3 அனல் மின் நிலையங்கள் மேலதிகமாக செயற்பாட்டிற்காகச் சேர்க்கப்படும்.

ஏற்கனவேயிருக்கும் சுயாதீன மின் சக்தி உற்பத்தியாளர்களால் 652 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1388 MW கொள்ளளவுடன் இலங்கையில் 16 நீர் மின்னிலையங்கள் உள்ளன. அத்துடன், 182.2 MW கொள்ளளவுடனான 3 நீர் மின்னிலையங்கள் 2019-2022 காலப்பகுதியில் செயற்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படும். பொதுமக்களின் கருத்துகள் 15-03- 2017 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ எதிர்பார்க்கப்படுகின்றன. consultations@pucsl.gov.lk எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது 2392641 எனும் தொலைநகல் இலக்கத்திற்கோ கருத்துக்களை அனுப்ப முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50