ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்க தயார் - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்

16 Dec, 2023 | 07:13 AM
image

(நமது நிருபர்)

ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

'அரசியல் தரப்புக்கள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்கு முன்மொழிந்தால், நான் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நாட்டின் இயற்கை வளங்கள், திறன்மிக்க தொழிற்படை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் போன்றவற்றை மேற்கோள் காண்பித்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக்குத் தேவையான அனைத்தும் இங்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இவ்வளங்களை உரியவாறு செயற்திறன்மிக்க வகையில் முகாமைசெய்து பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் முழுமையான பயனை நாடு பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நிலையான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு ஊழலை இல்லாதொழிப்பது மிக அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு ஏற்றவகையில் தற்போதைய கணக்காய்வு செயன்முறை நன்கு வலுப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40