களுத்துறையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

 பாதாள உலகக் குழு நபரான சமயங் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக சமயங் உள்ளிட்ட சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

 “சமுகத்தில் தான் ஒரு தவறானவன் என தோற்றமளித்தாலும் நான் சரியானவன் என என் இதயத்துக்கும் மேலே உள்ள கடவுளுக்கும் தெரியும். சமுகத்தை பற்றி எனக்கு கவலை இல்லை' என  கொல்லபட்ட பாதாள உலகக் கோஷ்­டியின்  தலை­வ­னான 'ரணாலே சமயா' தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவொன்றை இட்டுள்ளார்.

மேலும், 

“எனது பெயர் மாத்திரமே உங்களுக்கு தெரியும். என் வாழ்க்கை பற்றி எனக்கு மாத்திரமே தெரியும்”

“என்னை காயப்படுத்துபவர்களை நானும் காயப்படுத்துவேன்.. அது என் குணம்”

“முகத்தை பார்த்து நடத்தையை தீர்மானிக்காதே பழகி பார்”

“கல்லினால் அடிப்பவர்களுக்கு மலரினால் பூஜிக்கும் பழக்கம் எனக்கு இல்லை” போன்ற பதிவுகளை இட்டுள்ளார். 

இதேவேளை, “நீ உலகிற்கு யாராக இருந்தாலும் நீ எங்களின் நல்ல நண்பன்” என சமயனின் நண்பர்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அறிந்து கொண்ட களுத்துறைச் சிறைச்சாலை கைதிகள் பெரும் துயரடைந்துள்ளதாகவும் நேற்று பகல் உணவையும் தவிர்த்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த 7 பேரின் உயிரைப் பறிந்த சந்­தேக நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் சமயங் குழு­வுக்கு எதி­ரான பாதாள உலகக் குழு உறுப்­பி­னர்கள் எனவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் அவர்­களை கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் கால கால­மாக நில­விய பகையே இந்த துப்­ப­ககிச் சூட்­டுக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

எது எவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமிக்க சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

களுத்துறை சம்பவம்: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 12-16 பேர் பங்கேற்பு, சினிமா பாணியில் கொரிலா தாக்குதல் : சமயங் எதிர்கொண்ட கொலை அச்சுறுத்தல்கள்