(இராஜதுரை ஹஷான்)
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையை பண்ணையாளர்கள் குறைக்காவிட்டால் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
முட்டை உற்பத்தியாளர்களுக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் வர்த்தகர்கள் 55 முதல் 65 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்கிறார்கள். பண்ணையாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.
இன்னும் ஓரிரு தினங்களின் முட்டையின் விலையை குறைக்காவிட்டால் பண்டிகைக் காலத்துக்கு தேவையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
சந்தையில் பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. பாக்கிஸ்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM