நிலாவெளி கடல் பரப்பில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனொருவனை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ரம்பாவ பகுதியைச் சேரந்த 10 வயதுடைய பாஹிம் மொஹமட் பஷன் என்ற சிறுவனே கடலில் அடித்துச்செல்லப்பட்ட போது கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்டவராவார்.

குறித்த சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக பொற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.