யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

15 Dec, 2023 | 12:22 PM
image

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார பணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும், சூம் ஊடாகவும் கலந்துக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அந்ததந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், சுகாதார துறைசார் அதிகாரிகளும் சூம் ஊடாக தெரிவித்தனர். 

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால்  ஆளுநருக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

அதற்கமைய, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு  ஆளுநர் ஆலோசனை வழங்கினார். வடிகான் துப்பரவு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில், காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்காக பொலிஸ், முப்படைகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும்  ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் எனவும், தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் என இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களில் காணப்படும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் அறிவித்தல்களை வழங்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், சுற்றுசூழல் பாதுகாப்புக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கிராமிய மட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். 

அதற்கமைய, வாராந்த கிராமிய மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளில் மேம்படுத்துமாறும்  ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய வைத்தியர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு,  ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50
news-image

நாட்டின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

2025-06-15 14:03:20