பொருளாதார நெருக்கடிக்கு காரணமானோர் மீது தக்க நடவடிக்கை அவசியம் - மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வில் பொதுமக்கள் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

15 Dec, 2023 | 09:37 AM
image

(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச்சுட்டி ஆய்வில் பெரும்பான்மையான பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச்சுட்டி ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு அந்நிலையத்தின் கணக்கெடுப்பு ஆய்வுப்பிரிவான சமூகக் குறிகாட்டியினால் (சோஷல் இன்டிகேட்டர்) தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

'ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கமானது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யும் எனக் கூறக்கூடிய பொருளாதார மற்றும் கொள்கை மறுசீரமைப்புக்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொதுமக்கள் பொறுப்புக்கூறவேண்டிய அவசியமில்லை என்றாலும், இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை அவர்கள் தாங்கிக்கொள்ளவேண்டியுள்ளது' என்று அவ்வறிக்கையில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது பகுதியளவில் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் சிங்களம், தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய நான்கு முக்கிய சமூகங்களைச் சேர்ந்த 1350 நபர்களை மாதிரியாகக்கொண்டு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாய்வு முடிவுகளின்படி 94.1 சதவீதமானோர் அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் கணக்கில் வராத அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் எனவும், 94.5 சதவீதமானோர் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டும் எனவும், 94.8 சதவீதமானோர் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்தவேண்டும் எனவும், 95.2 சதவீதமானோர் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். குறிப்பாக பெரும்பான்மையான இலங்கையர்கள் அரசியல் தலைமையின் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை நாட்டின் ஊழல் நிலைவரத்தைப் பொறுத்தமட்டில் 87.2 சதவீதமானோர் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், 8.1 சதவீதமானோர் பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்ததைப்போன்றே தற்போதும் இருப்பதாகவும், 3 சதவீதமானோர் ஊழல் மோசடிகள் குறைவடைந்திருப்பதாகவும். 1.6 சதவீதமானோர் அதுபற்றித் தமக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு...

2025-04-24 17:44:13