இலகு ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க ஜப்பானுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 3

14 Dec, 2023 | 03:04 PM
image

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொகை முதல் மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது.

எவ்வாறாயினும் ஜப்பானுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி அடுத்த வருடத்தில் பொது வசதிகள் இடமாற்றம் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் செயற்படுத்தப்படவுள்ளது.

இலகு ரயில் திட்டத்துக்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. மாலபே முதல் கோட்டை வரையிலான கட்டுமானம் தொடர்பான விரிவான திட்டங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ஏல ஆவணங்கள் மதிப்பீடுகள் மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் அடிப்படை விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 120 மில்லியன் டொலர்களாகும்.

இந்த பூர்வாங்க பணிகள் 2019 ஏப்ரலில் தொடங்கி 91 மாதங்களில் முடிக்கப்பட இருந்தது. இருப்பினும், 21 மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 31, 2020க்குப் பிறகு திட்டத்தை இரத்து செய்ய அப்போதைய அரசாங்கம் தீர்மானித்தது.

இத்திட்டத்திற்கான காணி கையகப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. இதற்காக அடையாளம் காணப்பட்ட காணியின் அளவு 22 ஹெக்டயர் ஆகும். பெரும்பாலான காணி கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இலகுரக ரயில் சேவை இரத்து செய்யப்பட்டதால், ஆலோசனை சேவைகளுக்காக நியமிக்கப்பட்ட நிறுவனம் கோரிய சேதங்களை ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய, அமைச்சரவை பேச்சுவார்த்தை குழுவை நியமித்துள்ளது. இதற்கிடையில், ஜைக்கா நிறுவனம் பெற்ற கடன் தொகையில் இருந்து திட்டத்திற்காக செலுத்த ஒப்புக்கொண்டது. ஆனால், கடன் செயல்படுத்தப்படாததால் பணம் செலுத்தப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27