‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘தனி ஒருவன்’. கதாபாத்திரத் தெரிவு, கதைக்களம், திரைக்கதை, சுவையான திருப்புமுனைகள், சிறு சிறு யுக்திகள் என்று, படம் முழுவதும் பரபரப்புக் கிளப்பிய படம் இது.
வேற்று மொழிப் படங்களைத் தமிழில் ‘ரீமேக்’ செய்து இயக்கிவந்த ஜெயம் ராஜா, சொந்தமாகக் கதை எழுதி இயக்கி வெற்றிபெற்ற படம் இது.
இந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கப் போவதாக ஜெயம் ராஜா அறிவித்திருக்கிறார். வழமை போலவே, இந்தப் படத்திலும் அவரது சகோதரர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். ஆனால் இம்முறை, அரவிந்த் சுவாமிக்குப் பதிலாக வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் பொலிவுட் நட்சத்திரமான அபிஷேக் பச்சன்! பல்வேறு நடிகர்களைத் தேர்வு செய்து, கடைசியில் அபிஷேக்கை உறுதிசெய்திருக்கிறார் ஜெயம் ராஜா.
தனி ஒருவன் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரத்துக்கு இணையான முக்கியத்துவம், அபிஷேக் பச்சனின் கதாபாத்திரத்துக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜெயம் ராஜா தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்தை அடுத்து, ‘எம்.குமரன், சன் ஒஃப் மகாலட்சுமி’ படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கப்போவதாக ஜெயம் ராஜா தெரிவித்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM