இம்முறை வெளியான 2015 கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையில் கணிதப் பிரிவில் பொறியியல் பீடத்திற்கு 6 மாணவிகளும், மருத்துவ பீடத்திற்கு 11 மாணவிகளும், வர்த்தக பிரிவிற்கு 9 மாணவிகளும், கலைப்பிரிவில் சட்டத்துறைக்கு 2 மாணவிகளும் தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்படி மாணவிகளை பாடசாலை சமூகம் பாராட்டும் நிகழ்வு இடம்பெற்ற போது மாணவிகளை பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உயர்தரம் கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தியதுடன் இம்மாணவிகள் அவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தது போல் பல்கலைக்கழகத்திலும் பாடசாலையின் பெயருக்கு பெருமையை சேர்க்க வேண்டுமெனவும் பாடசாலை அதிபர் ராஜகுமாரி கனகசிங்கம் மாணவிகளுக்கு தெரிவித்தார்.

பொறியியல் பீடத்தில் முதல்நிலை பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷங்கனியும் சட்டத்துறையில் முதல்நிலை பெற்ற மாணவி அபிராமி-யூவராஜன் ஆகியோரும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)