(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்குவதாகவும், சாதாரண மக்களை உதாசீனப்படுத்தும் வகையிலுமே காணப்படுகிறது.
இதனால் சாதாரண மக்கள் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடிகள் கவலைக்குரியவையாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரத்தை எண்ணி கவலையடைகின்றோம். சாதாரண மக்களை மறந்து தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்கும் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியது. இந்த வரவு - செலவு திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகை மாத்திரம் கிடைத்தால் போதாது. இனிவரும் காலங்களில் எஞ்சிய கடன் தொகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் எதிர்கொள்ள நேரிடவுள்ள துயரத்தை எண்ணி கவலையடைகின்றோம்.
ஊழலுக்கு எதிராக, ஊழலை ஒழிப்பதற்காக முன்னிற்கின்ற எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும்.
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க சகல சலுகைகளையும் உதாசீனப்படுத்தி, கொள்கை ரீதியாக தீர்மானத்தை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM