களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு, காரைதீவைச் சேரந்த இளைஞரெருவரும் பலியாகியுள்ளார்.

குறித்த தாக்குதலில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் மட்டக்களப்பு காரைத்தீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தம் என்ற இளைஞரே இவ்வாறு உயிரழந்தவராவார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமெரு சிறைச்சாலை உத்தியோகத்தரான விஜயரத்ன என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் சமயங் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.