தாயைத் தாக்கி விட்டு மாணவியான மகளைக் கடத்திச் சென்ற நபர்கள் : மத்துகமவில் சம்பவம்!

Published By: Digital Desk 3

14 Dec, 2023 | 02:44 PM
image

தனியார்  வகுப்புக்குச்  சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு  திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி  விட்டே  மாணவியைக்  கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார்  வகுப்புக்கு ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்  கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியைக் கடத்திச் சென்றதாக அவரின் தாய்  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது மாணவி கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் தாய் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58