(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிந்து பாக்கிஸ்தான் வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை.
நாணய நிதியத்தின் தாளத்துக்கமைய ஆடும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது.அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுகிறது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதவிக்கு வந்தவுடன் இலங்கை வங்குரோத்து நிலையடைந்து விட்டது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அமைச்சரவையோ,பாராளுமன்றமோ அறியவில்லை.
இலங்கையை போலவே பாக்கிஸ்தானும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மீட்சிக்காக பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது வங்குரோத்து நிலையை அறிவிக்குமாறு நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் பிரயோகித்தது.
நந்தலால் வீரசிங்க போன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு ஆதரவானவர்கள் பாக்கிஸ்தானில் இல்லாத காரணத்தால் பாக்கிஸ்தான் வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை.வங்குரோத்து என்று அறிவித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆட வேண்டும் என்பதை பாக்கிஸ்தான் நன்கு அறிந்திருந்தது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடவில்லை. வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை.
சவூதி அரேபியா,கட்டார்,டுபாய்,சீனா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று,வெளிநாட்டு கையிருப்பை தக்கவைத்துக் கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தேசிய தொழிற்றுறையை இல்லாதொழிக்கும் வகையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் காணப்படுகின்றன.
வைத்திய உபகரணங்கள்,உணவு பொருட்கள் உட்பட தேசிய மட்டத்திலான சகல உற்பத்திகள் மீதும் மனசாட்சியில்லாமல் வரி விதிக்கப்பட்டுள்ளது.வரி விதித்தல்,இருக்கும் வளங்களை விற்றல் ஆகியன அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையாக உள்ளன.
வற் வரி விதிப்பால் தனியார் துறையினரும் பாதிக்கப்படுவார்கள்.தொழிற்றுறை வீழ்ச்சியடையும் போது தனியார் துறையினரும் தமது சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அந்த சொத்துக்களை வெளிநாட்டவர்களே விலைக்கு வாங்குவார்கள்.ஏனெனில் இனிவரும் காலங்களில் நாட்டு மக்கள் அனைவரும் உள்ளதை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடும் இந்த அரசாங்கத்தினால் நாட்டுக்கு விமோசனம் கிடைக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM