கண்டி - உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டனர். உன்னஸ்கிரிய - லூல்வத்தை பாதையை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேற்படி தோட்டத்தில் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தமக்கு இதுவரை காலமும், மாதத்துக்கு 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், குறைந்தது 21 நாட்களுக்காவது எமக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.