நடிகர் அஜித் "துணிவு" படத்தை அடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கும் "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இரு வேடங்களில் அஜித் நடித்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் அங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீவிர டயட், உடற்பயிற்சியை கடைப்பிடித்து 15 கிலோ வரை எடை குறைத்து நடித்து வருவதாக படக்குழுவில் கூறுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில், அஜித்தின் தற்போதைய புகைப்படமொன்று வெளியாகி உள்ளது. அதில் அவர், முன்பு இருந்ததை விட மிகவும் எடை குறைந்த தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த தோற்றம் அட்டகாசமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM