(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. தவறான தீர்மானம் எடுத்தவர்களுக்கு பொருளாதார பாதிப்பு தாக்கம் செலுத்தவில்லை.நடுத்தர மக்களே உண்பதற்கு கூட உணவில்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மாய வித்தைகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகிறார்.ஆனால் அவர்கள் தான் மாய வித்தைகாரரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு அழைத்து வந்தார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்று இறந்த காலத்தை ஆராயமல்,கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.காலத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் தன்மையே தற்போது காணப்படுகிறது.
நாட்டு மக்களின் எதிர்காலத்தை கொள்ளையடித்து,அரச சொத்துக்களை மோசடி செய்து,தவறான பொருளாதார கொள்கை திட்டங்களை ஆட்சியாளர்கள் எடுக்கும் போது அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் கடந்த காலத்தை மறக்கலாம்.ஆனால் நாட்டு மக்கள் அந்த கடந்த காலத்தை மறக்க கூடாது.
2002 ஆம் ஆண்டு முதல் தவறிழைத்துள்ளதாகவும்,அதன் பிரதிபலனை தற்போது எதிர்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் தவறின் பிரதிபலனை தவறு செய்தவர்கள் எதிர்கொள்வதில்லை.தற்போதைய பொருளாதார பாதிப்பை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கொள்கிறாரா ? ,இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களிலும் ஏதாவதொரு வழியில் அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.இவர் குறிப்பிடுகிறார்.கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்று.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உண்ண உணவில்லாமல்,வாழ வழியில்லாமல் சாதாரண மக்களே உள்ளார்கள்.தவறான பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியவர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை.இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் புறக்கணிக்க வேண்டும். நாட்டை சீரழித்தவர்களால் நாட்டை சீர் செய்ய முடியாது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள் முழுமையாக இல்லாதொழிந்துள்ளன. இதனை எவ்வாறு பொருளாதார மீட்சி என்று குறிப்பிட முடியும்.
கடந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் சிறு மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே வீழ்ச்சியடைந்துள்ள தொழிற்றுறையை மேம்படுத்த என்ன திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மின் கொள்வனவு தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்களை குறிப்பிட்டு மின்சக்தி அமைச்சர் என்னை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார்.எம் கட்சி அவருடன் விவாதத்துக்கு தயார் .எரிபொருள்,மின்சாரம் கொள்வனவு தொடர்பில் அவருடன் விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM