இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும், ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர் ஒருவரை நேற்று காய்கறி வியாபாரி ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே  இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்காகிய ஊழியர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஊழியரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசாங்க ஊழியரை தாக்கியமைக்கு எதிர்பு தெரிவித்துமே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினால் நாவலப்பிட்டி பிரதேசத்தின் சகல அரச பஸ் வண்டிகளின்  மார்க்ங்களுக்குமான போக்குவரத்து ஸ்தம்பிதமானதுடன், பயணிகள்  பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.