(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நான் எதிரணி பக்கம் செல்லவுள்ளதாக பொய்யான வதந்தி பரப்பி விடப்பட்டுள்ளது. 69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்தி நான் ஆளும் தரப்பில் உள்ளேன்.
எதிரணி பக்கம் செல்ல வேண்டிய தேவை எனக்கில்லை. என்னை எதிரணி பக்கம் அனுப்புவதற்கு ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்களை நீக்கி, நான் நியமித்த இடைக்கால தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு துணை போவதை இந்த அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லங்கா வைத்தியசாலை கடந்த ஆண்டு 4000 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.அதேபோல் டெலிகொம் நிறுவனம் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 12 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.
நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
நான் எதிரணி பக்கம் செல்லவுள்ளதாக பொய்யான வதந்தி பரப்பி விடப்பட்டுள்ளது.நான் 69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் தரப்பில் உள்ளேன்.
எதிரணி பக்கம் செல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.என்னை எதிரணி பக்கம் அனுப்புவதற்கு ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். எனக்கு எதிராகவும்,நாட்டுக்கு எதிராகவும் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு நிச்சயம் எதிர்காலத்தில் பதிலளிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM