களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக்  கோஷ்டி  சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நேற்றுக் காலை களுத்­துறை, மல்­வத்த - எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­ம­ாரி­யான துப்­ப­ாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இதன்போது அந்த பஸ் வண்­டியில் இருந்த பிர­பல பாதாள உலகக் கோஷ்­டியின்  தலை­வ­னான 'ரணாலே சமயா' அல்­லது சமயங் என அறி­யப்­படும் எம்.பி. அருண தமித் உத­யங்க பத்­தி­ரண உள்­ளிட்ட 5 கைதி­களும் இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேலும் நான்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் படு காய­ம­டைந்த நிலையில் களுத்­துறை - நாகொட வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளனர்.

சம்­பவம் குறித்து களுத்­து­றைக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.பெரே­ராவின் நேரடி கட்­டுப்­பாட்டில் 3 குழுக்­களும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மீரி­ஹான விசேட குற்­ற­வியல் பிரிவு ஆகி­ய­னவும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக 

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். சம்­பவம் குறித்து  அனைத்து விசா­ர­ணை­களும் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் குற்­ற­வியல், போக்குவரத்து பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான நந்­தன முன­சிங்­கவின் நேரடி மேற்­பா­ர்வையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இத­னை­விட சிறைச்­சாலை மட்­டத்­திலும் சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக சிறைச்­சாலை ஊடகப் பேச்­சாளர் துஷார உபுல் தெனிய தெரி­வித்தார்.

 நடந்­தது என்ன? பின்­ன­ணியில் இருந்து

 கடு­வலை - நவ­க­முவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் இடம்­பெற்­றி­ருந்த மூன்று கொலைகள் மற்றும் ரீ 56 ரக துப்­பக்­கி­யொன்­றினை அருகில் வைத்­தி­ருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்டின் கீழ் சமயங் மற்றும் அவ­ரது சகாக்கள் நால்வர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லை­யி­லேயே தடுத்து  வைக்­கப்பட்­டி­ருந்­தனர். இந்த நிலையில் அது தொடர்­பி­லான வழக்கு நேற்று கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

 அந்த வழக்கில் ஆஜர் செய்­வ­தற்­காக பதாள உலகக் கோஷ்டி சந்­தேக நபர்­களை  ஏற்றிக் கொண்டு களுத்­து­றை­யி­லி­ருந்து கடு­வலை நீதி­மன்­றத்­திற்கு என்.ஏ.8447 எனும் இலக்­கத்தை உடைய சிறைச்­சாலை பஸ் வண்டி பய­ணித்­துள்­ளது. 

இதன்­போது 5 கைதிகள் அந்த பஸ்ஸில் இருந்­துள்­ள­துடன் அவர்­களின் பாது­காப்­புக்­கென 6 சிறைச்­சாலை அதி­கா­ரி­களும் பய­ணித்­துள்­ளனர்.

திடீர்­ எ­ன­ ந­டந்­த ­துப்­பாக்­கிச்­ சூடு

இந்த நிலையில் நேற்று காலை 8.00 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கைதி­களை ஏற்­றிய பஸ் வண்­டி­யா­னது கடு­வலை நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. சிறைச்­சா­லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்­ற­ருக்கு உட்­பட்ட பகு­தியில் உள்ள மல்­வத்த - எத்­த­ன­ம­டல என்ற இடத்தில் வைத்து சிறைச்­சாலை பஸ் வண்­டியை கெப் ரக வாகனம் ஒன்று குறுக்­காக மறித்து நிறுத்­தி­யுள்­ளது. 

அந்த இடம் மண் அகழ்­வுகள் இடம்­பெறும் மண் மேடு­க­ளுடன் கூடிய பகு­தி­யாகும்.

பொலிஸ்­ உ­டை­யில்­ இ­ருந்­த­வர்­கள்­ துப்­பாக்­கிச்­ சூடு

பஸ் நிறுத்­தப்­பட்­டதை அடுத்து குறுக்­காக  நிறுத்­தப்­பட்ட கெப் ரக வாக­னத்தில் இருந்து பொலி­ஸாரின் உத்­தி­யோ­க­பூர்வ உடையை ஒத்த உடையில் இருந்த துப்­ப­ககி தாரிகள் சிறைச்­சாலை பஸ் வண்டி மீது திடீ­ரென சர­ம­ரி­யான துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­யுள்­ளனர். இதன் போது பாது­க­ப­புக்கு இருந்த சிறைச்­சாலை அதி­கா­ரிகள் பதில் தக­குதல் நடத்தௌம் போது அருகில் இருந்த மண் மேடு­களில் இருந்தும் பஸ் வண்­டியை நோக்கி துப்­ப­ககிப் பிர­யோகம் நடத்­தப்ப்ட்­டுள்­ளது.

சிறைச்­சாலை பஸ் வண்­டியின்  மீது நாலா புறமும் நடத்­தப்ப்ட்ட துப்­ப­ககிச் சூடு கார­ண­மாக பஸில் இருந்த கைதி­களும் சிறை அதி­கா­ரி­களும் திக்­கு­முக்­காடி போயுள்­ளனர். இந்த நிலையில் ஒரு கட்­டத்தில் பஸ்­ஸ{க்­குள்ளும் ஏறிச்  சென்று துப்­பாக்­கி­தாரி ஒருவர் தக­குதல் நடத்­தி­யுள்­ள­மைக்­கான தட­யங்­க­ளையும் பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

சினிமா பாணியில் கெரில்லா தாக்­குதல்

சமயங் உள்­ளிட்ட பாதாள உலக கோஷ்­டி­யினர்  நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­லப்­படும் வரை அப்­பா­தையில் காத்­தி­ருந்து மிகத் திட்­ட­மிட்டு இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­கா­டினார். 

குறித்த பகு­தியில் தாக்­கு­தல்­தா­ரிகள் மறைந்­தி­ருந்­த­மைக்­கான தட­யங்­களை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

குறித்த மண் மேடு பகு­தியில் ஏற்­க­னவே வெள்ளை வேன், கெப் ரக வாக­னங்­களில் வந்து தாக்­கு­தல்தல் நடத்­தியோர்  பதுங்கி இருந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே பஸ் வண்டி அப்­ப­கு­தியை அடைந்த போது வழி மறித்தும் ஒழிந்­தி­ருந்தும் சர­ம­ரி­யான தக­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

10 இற்­கு­ மேற்­பட்­டோ­ரைக்­ கொண்­ட ­கும்பல்

 இந்த துப்­பாக்கிப் சமரில் சுமார் 12 முதல் 16 பேர் வரை பங்­கேற்­றுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் உறுதிச் செய்­யப்ப்ட்­டுள்­ளது. 

சந்­தேக நபர்கள் வெளியே தெரி­யா­த­வாறு கறுப்புக் கண்­ணா­டி­களைக் கொண்ட  இந்த பஸ் வண்­டியில் இவ்­வாறு நடத்­தப்பட்ட தாக்­கு­த­லா­னது மிகத் திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

உயி­ரி­ழப்­புக்­க­ளும்­ ப­டு­கா­யங்­களும்

  இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் கார­ண­மாக சிறைச்­சாலை பஸ்ஸில் பய­ணித்த ஐந்து கைதி­களும் ஸ்தலத்­தி­லேயே உயி­ரிந்­தனர். சமயங் எனப்­படும் அருண தமித் உத­யங்க பத்­தி­ன­ரன, சன்­னக சலன திலக் மல்­லி­காகே,கோர­லகே அமில பிர­சன்ன சம்பத், வாதுவ பத்­தி­ர­ணகே கெலும் பிரி­யங்­கர, லிந்­த­மு­லகே சுரங்க பிர­சன்ன குமார ஆகியோர் அவ்­வி­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். 

இத­னை­விட பஸ் வண்டில் கைது­க­ளுக்கு பொறுப்­பாக பய­ணித்த சிறைச்­சாலை மேற்­பார்­வை­யாளர் எஸ். சன்­னிகம் படு­கா­ய­ம­டைந்த நிலையில் நாகொட  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் உயி­ரி­ழந்தார். எனினும் ஸ்தலத்­தி­லேயே சிறைச்­சாலை பாது­கா­வ­ல­ரான எஸ்.ஆர். விஜே­ரத்ன  உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

 நால்வர் படு­காயம்

 இத­னி­டையே துப்­பாக்கி சூடு கார­ண­மாக படு­கா­ய­ம­டைந்த மேலும் 4 சிறைச்­சாலை அதி­கா­ரிகள் களுத்­துறை நாகொட வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர். 

அவர்­களில் இரு­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­கவும் ஏனைய இரு­வ­ருக்கும் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன. 

இதில் ஒருவர் மேல­திக சிகிட்ச்­சை­க­ளுக்­காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

ஸ்தலத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த வேன், கடத்­தப்­பட்ட கெப்

 இந்த தாக்­கு­த­லுக்கு துப்­பாக்­கி­தா­ரிகள் வரு­கை­தந்­த­தாக நம்­பப்­படும் வெள்ளை நிற வேன் ஒன்று ஸ்தலத்­தி­லேயே நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் தக­கு­த­லுக்கு வந்­த­தாக நம்­பப்­படும் கெப் வாக­னத்­தையும் பொலிசார் அடை­யாளம் கண்­டுள்­ளனர். 

இந்த கெப் வண்­டி­யா­னது கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் பிறி­தொரு இடத்­தி­லி­ருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதன் உரி­மை­யாளர் கண்­ட­றி­யப்­பட்டு  அத­னூ­டாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

இதன் போது கெப் வண்­டி­யா­னது சொந்தக் கார­ரி­ட­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்­டது என்­பது தெரி­ய­வந்­துள்­ள­துடன் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

நீதி­வான்­ வி­சா­ரணை

 சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்­திற்கு விரைந்த களுத்­துறை பிர­தான நீதிவான்  விசா­ரணை  முன்­னெ­டுத்­தி­ருந்தார்.  சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த உத்­த­ர­விட்ட அவர் சந்­தேக நபர்­களை உடன் கைது செய்­யு­மாறும்  அறி­வு­றுத்­தினார்.

ரீ 56, 9 எம்.எம். துப்­பாக்­கிகள் பயன்­பாடு?

 இந்த துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு ரீ 56 ரக துப்­பாக்­கி­களும் 9 மில்லி மீற்றர் ரக துப்­பா­க்­கி­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

சந்­தேக நபர்கள் அடை­யாளம்

 சிறைச்­சாலை பஸ் வண்­டியின் மீது தாக்­குதல் நடத்திய 7 பேரின் உயிரைப் பறிந்த சந்­தேக நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் சமயங் குழு­வுக்கு  எதி­ரான பாதாள உலகக் குழு உறுப்­பி­னர்கள் எனவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­விக்­கின்றார். 

இந் நிலையில் அவர்­களை கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் கால கால­மாக நில­விய பகையே இந்த துப்­ப­ககிச் சூட்­டுக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

விசா­ரணைக் கோணங்கள்

இத­னி­டையே விசா­ர­ணை­களின் பொருட்டு நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிறப்புக் குழுக்கள் கொழும்பு, களுத்­துறை, நுகே­கொடை, அத்­து­ரு­கி­ரிய ஆகிய பகு­தி­களில் நேற்று இது தொடர்பில் சிறப்பு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

 விஷே­ட­மாக  கொலை­கா­ரர்கள் பாதையில் நின்­றி­ருந்த இடங்கள், அவர்­க­ளுக்கு உத­வி­ய­வர்கள், சிறைச்­சாலை பஸ் வரும் பாதை தொடர்பில் விசா­ர­ணையில் கூடிய அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

துப்பக்கிச் சூட்டினால் துளைக்கப்பட்ட பஸ்

 துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான சிறைச்சாலை பஸ் வண்டியானது களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு காரணமாக அந்த பஸ் வண்டியின் நாலா புறமும் துளைகள் விழுந்திருப்பதை அவதானிக்க  முடிந்ததுடன் பஸ் வண்டி முழுவ்தும் இரத்தக் கறைகள் படிந்துள்ளன.

 சமயங் எதிர்கொண்ட கொலை அச்சுறுத்தல்கள்

 கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதியும் இதே வழக்கு தொடர்பில் சமயங் கடுவலை நீதிமன்றுக்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. இதில் அவர் படு காயமடைந்திருந்த நிலையில், அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு அவரை அழைத்து வரும் போது கடும் பாதுகாப்பினை வழங்க  கடுவலை நீதிமன்றம் உத்தர்விட்டிருந்தது.

இப்படியான பின்னணியிலேயே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் அவரும் அவருடன் இருந்த மேலும் நான்கு கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம்  தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன.